ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிஃபா 2022 | ட்ராவில் முடிந்த ஆட்டம் - ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்திய குரோஷிய அணி!

பிஃபா 2022 | ட்ராவில் முடிந்த ஆட்டம் - ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்திய குரோஷிய அணி!

குரோஷிய அணி

குரோஷிய அணி

இறுதிவரை போராடியும் இரு அணிகளாலும் வெற்றிக் கோலை பதிவு செய்யமுடியவில்லை இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது அதிலும் கோல் அடிக்காததால் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaQatarQatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பானை வீழ்த்தி குரோஷிய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கிறது. வாழ்வா சாவா என்ற நிலையில் வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுகின்றனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜப்பான் - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மேடா கோல் அடித்து முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். 2வது பாதியில் 55-வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த கிராஸ் பாஸை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் குரோஷிய வீரர் பெரிசிச்.

பின்னர் இறுதிவரை போராடியும் இரு அணிகளாலும் வெற்றிக் கோலை பதிவு செய்யமுடியவில்லை இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது அதிலும் கோல் அடிக்காததால் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனால், வெற்றியைத் தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வாய்ப்புகளையும் ஜப்பான் வீரர்கள் தவறவிட்டனர். பின்னர் வந்த குரோஷிய வீரர்கள் அசால்டாக கோலாக மாற்றினர். இதன் மூலம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை ருசித்து காலிறுதிக்கு முன்னேறியது குரோஷிய அணி.

First published:

Tags: FIFA World Cup 2022, Japan