ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நாயகன் மீண்டும் வரான்.. களமிறங்கும் மெஸ்ஸி! இன்று அர்ஜெண்டினா vs சவுதி அரேபியா ஆட்டம்! களைகட்டும் கால்பந்து உலகக்கோப்பை!

நாயகன் மீண்டும் வரான்.. களமிறங்கும் மெஸ்ஸி! இன்று அர்ஜெண்டினா vs சவுதி அரேபியா ஆட்டம்! களைகட்டும் கால்பந்து உலகக்கோப்பை!

மெஸ்ஸி

மெஸ்ஸி

FIFA World Cup 2022: மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaQatarQatar

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது.

    கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களுக்கு தினம் தினம் விருந்து படைத்து வருகிறது.

    3ம் நாளான இன்று நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. 2021 கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடைசியாக ஆடிய 36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் பலம்வாய்ந்த அணியாக திகழ்கிறது.

    மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள டென்மார்க் - துனிசியா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பையில் முதல் முறையாக இவ்விரு அணிகளும் மோதுகின்றன. டென்மார்க் அணி ஆறாவது முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளதால் நம்பிக்கையுடன் களமிறங்கும்.

    இரவு 9.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் போலந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 1978ம் ஆண்டு விளையாடியுள்ளன. அதில் போலந்து 3-1 என வெற்றி பெற்றது. கடைசியாக விளையாடிய எட்டு உலகக் கோப்பை தொடர்களில் மெக்சிகோ அணி குரூப் சுற்றில் வெற்றி பெற்று நாக்-அவுட் வரை முன்னேறிய ஒன்றாகும். இந்த தொடரிலும் அதே முனைப்புடன் மெக்சிகோ பலம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி.. மைதானத்தில் பரபரப்பு.. 

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி - ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என வீழ்த்திய அனுபவத்துடன் நடப்பு உலகக் கோப்பையில் மீண்டும் அந்த அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது. 16 வது முறையாக உலகக் கோப்பையில் களம்காணத்துடிக்கும் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் உலகின் தற்போதைய சிறந்த வீரருமான பென்சிமாவும், முன்னணி வீரரான போக்பாவும் காயம் காரணமாக விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: FIFA World Cup, Qatar