நாளை தொடங்குகிறது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

news18
Updated: June 14, 2018, 7:39 PM IST
நாளை தொடங்குகிறது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா
உலகக்கோப்பை கால்பந்து 2018
news18
Updated: June 14, 2018, 7:39 PM IST
உலகம் முழுவதும் எதிர்பார்த்து வரும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளின் அணிகள் மற்றும் ரசிகர்கள் வருகையால் மாஸ்கோ நகரமே திருவிழா போல காட்சியளிக்கிறது.  32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டி நாளை தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 64 ஆட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியை காண சுமார் 1 கோடி ரசிகர்கள் மாஸ்கோவை நோக்கி திரளாக வந்து கொண்டிருகின்றனர். மேலும் இந்த போட்டியை உலக முழுவதிலும் உள்ள ரசிகர்கள் கண்டு ரசிக்க இணையதளத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த உலக கோப்பை போட்டிக்காக ரஷ்யாவில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 12 மைதானங்களை தேர்வு செய்து, ரசிகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானம்  81,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.1,300-ல் இருந்து ரூ.71,000 வரையிலான விலைகளில் விற்கப்படுகிறது. இதுவரை 25 லட்சத்திற்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதில் ரஷ்யாவை சேர்ந்த ரசிகர்கள் மட்டும் இதுவரை 8,72,000 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். மேலும் இந்திய ரசிகர்களுக்காக 17,962 டிக்கெட்டுகளை ‘பிஃபா’ ஒதுக்கியுள்ளது.

மேலும், மாஸ்கோவில் பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்தபட்டுள்ளன. அதில் 30 ஆயிரம் போலீசார் மைதானத்தை சுற்றி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா-சவூதி அரேபிய அணிகள் மோதுகின்றன. அடுத்து வரும்  கால்பந்து போட்டி 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...