முகப்பு /செய்தி /விளையாட்டு / FIFA உலகக்கோப்பை : மனிதவுரிமை மீறல், பீர் தடை... தற்போது லஞ்ச ஊழல்.... கத்தார் மேல் குவியும் சர்ச்சைகள்!

FIFA உலகக்கோப்பை : மனிதவுரிமை மீறல், பீர் தடை... தற்போது லஞ்ச ஊழல்.... கத்தார் மேல் குவியும் சர்ச்சைகள்!

தோற்பதற்கு லஞ்சம்

தோற்பதற்கு லஞ்சம்

தொடக்க ஆட்டத்தில்  (1-0 2வது பாதி) என்ற நிலையில் போட்டியை இழக்க, கத்தார் எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்தது. ஐந்து கத்தார் மற்றும் ஈக்வடார் உள்நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர்

  • Last Updated :
  • Chennai, India

உலகமே ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் 2022 இறுதியாக வந்துவிட்டது. இன்று மாலை கத்தாரின் அல்கோரில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார் ஈக்வடாரை எதிர்கொள்ள உள்ளது.

கத்தார் இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளராக இந்த நிலையை அடைய எண்ணற்ற சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. இன்றும் பல சர்ச்சைகள்அதன் பேரில் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இன்னும் தேற்றவும் வராத நிலையில் இப்போது கத்தார் உலகக் கோப்பை வெல்வதற்காக எதிர் அணிக்கு லஞ்சம் கொடுத்தாக புகார் எழுந்துள்ளது.

அரபு நாடு தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக இந்த புதிய ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது. மூலோபாய அரசியல் விவகாரங்களில் நிபுணரும், சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹாவின் கூற்றுப்படி, கத்தார் தொடக்க ஆட்டத்திலேயே எதிர் அணியை வீழ்த்த எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு 7.4 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அம்ஜத் தாஹாவின் ட்விட்டர் பதிவில் "பிரத்தியேகமாக: தொடக்க ஆட்டத்தில்  (1-0 2வது பாதி) என்ற நிலையில் போட்டியை இழக்க, கத்தார் எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்தது. ஐந்து கத்தார் மற்றும் ஈக்வடார் உள்நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர். இது தவறானது என்று நாங்கள் நம்புகிறோம். உலகம் FIFA ஊழலை எதிர்க்க வேண்டும் “ என்று பதிவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு பின்னர், கத்தாரோ அல்லது ஃபிஃபாவோ எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. அதோடு விளையாட்டு மைதானங்களில் பீர் தடைசெய்யப்பட்டதையடுத்து நாடும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதையும் படிங்க :பிபா கால்பந்து: 'இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது'.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!

இதற்கு முன்னர் உலகக் கோப்பை ஆட்டத்தில் கத்தாரும் ஈக்வடாரும் மூன்று ஆட்டங்களில் மோதியுள்ளனர், இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.அவர்கள் கடைசியாக சந்தித்தது அக்டோபர் 2018 இல், கத்தார் 4-3 என்ற வெற்றியை நிலை நாட்டியது.

இதையடுத்து இன்று இரவு தொடக்க நாள் போட்டியில் சந்திக்க உள்ளது. ஊழல் சர்ச்சைகளை தாண்டி இரு அணிகளில் எந்த அணி வெல்ல போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் இடையே அதிகரித்து வருகிறது.

First published:

Tags: Controversial speech, FIFA 2022, FIFA World Cup 2022, Qatar