ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

32 நாடுகள் பங்கேற்கும் FIFA கால்பந்து திருவிழா : கத்தாரில் கோலாகலமாக இன்று தொடக்கம்

32 நாடுகள் பங்கேற்கும் FIFA கால்பந்து திருவிழா : கத்தாரில் கோலாகலமாக இன்று தொடக்கம்

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி

'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிரிக்கெட்டுக்கு அடுத்து ரசிகர்களை நகம் கடித்து பார்க்கவைக்கும் விளையாட்டு கால்பந்து தான். டி20 கிரிக்கெட் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா இன்று கத்தாரில் கோலாகலமாகத் துவங்குகிறது. முதல் போட்டியில் கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.

தொடக்கம் :

உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா  1930-ம் ஆண்டு உருகுவேயில்  அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது. அப்போதிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது.

இரண்டாம் உலக போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்தது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

2022 கால்பந்து திருவிழா...

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா  கத்தாரில் இன்று (20-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது

ஒவ்வொரு போட்டியின் போதும் அது நடை பெரும் இடத்தை பொறுத்து அதற்கான மஸ்கேட் உருவங்களும், பந்துகளை பெயரும் சூட்டப்படும். அப்படி 2022 நடைபெறும் கால்பந்து போட்டிக்கான கத்தாரின் மரபு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ போட்டி பந்துக்கு, பயணம் எனும் பொருள்படும் "அல் ரிஹ்லா" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :இதல்லவோ கேச்....பவுண்டரி லைனில் பறந்து, பாய்ந்து 'பீல்டிங்' செய்த ஆஸ்திரேலிய வீரர்!

அதிகாரபூர்வ மஸ்கேட்டிற்கு  லாயீப் - Laʼeeb என்று பெயர் சூட்டியுள்ளனர். இது ஒரு அரபு வார்த்தை. அதன் பொருள் "அதிக திறமையான வீரர்" என்பதாகும்.

போட்டிகள் விபரம்:

டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

பிரிவு ஏ:   கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பிரிவு பி:  இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

பிரிவு சி : அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

பிரிவு டி:  பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

பிரிவு இ:  ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

பிரிவு எப் : பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

பிரிவு ஜி : பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

பிரிவு எச் : போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். டிசம்பர் 2-ந் தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

இரண்டாம் சுற்று டு இறுதி சுற்று ....

  • டிசம்பர் 3 முதல் 6-ந் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 அணிகளில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.
  • டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கால் இறுதியும்,
  • 13 மற்றும் 14-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும்.
  • இறுதிப் போட்டி டிசம்பர் 18-ந் தேதி நடக்கிறது.

இதையும் படிங்க: பிபாவுக்கு எப்படி வருமானம் வருகிறது தெரியுமா? வியக்க வைக்கும் பிபா அமைப்பின் வருமானம்

பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

ஆனால் 4 முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

முதல் ஆட்டம்...

தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அதன் பின்னர் முதல் ஆட்டமாக. 'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தொடக்க விழா...

தொடக்க விழாவில் பிரபல பி.டி.எஸ். பாடகர் ஜங்குக் மற்றும் அமெரிக்க குழுவான ஐட்பீஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து பாடகர் ராபி வில்லியம்ஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Football