FIFA Club World Cup : பெண் நடுவருடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்

பெண் நடுவர்கள் எடினா ஆல்வ்ஸ் மற்றும் நியூசா பேக் இளவரசரிடம் கைகொடுக்காமல் கடந்து செல்ல அறுவுறுத்தப்பட்டிருந்தனர்.

  • Share this:
    ஃபிபா கிளப் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரின் போது விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது பெண் நடுவர்களுடன் கைகுலுக்க கத்தார் இளவரசர் மறுத்துவிட்டார்.

    கத்தாரில் நேற்று நடைபெற்ற கிளப் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணியை பேயர்ன் முனிச் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதை தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் கத்தார் இளவரசர் ஷேக் ஜோன் பின் ஹமாத் அல் தானி கலந்து கொண்டார்.

    அப்போது சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆண் நடுவர்கள் இளவரசர் உடன் கைகுலுக்கி சென்றனர். ஆனால் பெண் நடுவர்கள் எடினா ஆல்வ்ஸ் மற்றும் நியூசா பேக் இளவரசரிடம் கைகொடுக்காமல் கடந்து செல்ல அறுவுறுத்தப்பட்டிருந்தனர்.

    இஸ்லாம் முறைப்படி குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து,எதிர் பாலினத்தவர்களை சேர்ந்த ஒருவரை உடல் ரீதியாக தொடர்பை அனுமதிக்காது. இதனால் கத்தார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
    Published by:Vijay R
    First published: