கோவிட்-19: ஐபிஎல் 2021 சீசனில் நிலவும் நிச்சயமற்ற சூழல்... கவலையில் ரசிகர்கள்!

கோவிட்-19: ஐபிஎல் 2021 சீசனில் நிலவும் நிச்சயமற்ற சூழல்... கவலையில் ரசிகர்கள்!

ஐபிஎல்

பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள், இதற்கு இடையே நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை ஐபிஎல் 2021 போட்டிகளை கண்டு மகிழ காத்திருக்கும் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

  • Share this:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே கிரிக்கெட் ரசிகர்களின் நாடி மற்றும் இதய துடிப்பை எகிற வைக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா சென்னையில் இன்று துவங்க உள்ளது. நாட்டின் அன்றாட கோவிட் -19 வழக்குகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 வைரஸ் தொற்றின் சங்கிலியை உடைக்க நாட்டின் பல பகுதிகள் மற்றும் மாநில அரசுகளால் புதிய விதிகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு தொற்று பரவலை குறைக்கும் வகையில் தமிழகத்திலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றை கூர்ந்து கவனித்து வரும் ஐபிஎல் ரசிகர்கள், ஒருவேளை கொரோனா காரணமாக கடந்த வருடம் போல இந்த வருடமும் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று ஊகித்தபடி உள்ளனர்.

பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள், இதற்கு இடையே நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை ஐபிஎல் 2021 போட்டிகளை கண்டு மகிழ காத்திருக்கும் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராக இருந்த சில அணியின் வீரர்கள் மற்றும் கிரவுண்ட் ஊழியர்கள் என பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோரை சரியான நேரத்தில் மீட்க முடிந்தாலும், கூடவே சில ரசிகர்கள் இல்லாமல் கூட போட்டிகளை நடத்தி விட முடியும். வீரர்கள் இல்லாமல் எப்படி? என கேள்விகள் எழுந்துள்ளன. இப்படி தொடர்ந்து ஐபிஎல் தொடர்புடையவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டால் ஐபிஎல் துவங்கினாலும் தொடர்ந்து லீக் போட்டிகளை நடத்த முடியுமா என்ற கவலையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. கோவிட் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றம் நீடிப்பது ஐபிஎல் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட கூடாது என்ற தங்களின் எண்ணத்தை, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். ஐபிஎல் நடக்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்கள் "IPL போட்டிகளை கேன்சல் செய்து விடாதீர்கள்"என்ற வாசகத்துடன் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் "IPL ரத்து செய்யப்படாது என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டு வருகின்றனர். தொற்று காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஒன்று கூட ரத்து செய்யப்படாமல் முழுமையாக இந்த தொடர் நடந்து முடிய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
Published by:Ram Sankar
First published: