இது ஒரு கடினமான முடிவு: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய டூ பிளிசிஸ் உருக்கம்

டூ பிளசிஸ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாக இருந்துவந்த டூ பிளசிஸ் தற்போது அந்த பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  2012-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு தலைமையேற்ற டூ பிளசிஸ் இதுவரை 112 சர்வதேச போட்டிகளில் அந்த அணிக்கு தலைமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஏற்கனவே அவர் கடந்த மாதம் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்த நிலையில் தற்போது அனைத்துவிதமான போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் டூ பிளசிஸ்.

  இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுவரும் குயிண்டன் டி காக் மூன்று வகை போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணிக்கு தலைமைப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

  தனது பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டூ பிளசிஸ், “ இது ஒரு கடினமான் முடிவு. தென் ஆப்ரிக்க அணி புதிய தலைமையின் கீழ் பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது என்ற நோக்கத்தில் தான் நோக்கத்தில் தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன்.

  இனி வரும் காலங்களில் ஒரு சக வீரராக புதிய கேப்டனுக்கும் சக வீரர்களுக்கும் என் ஒத்துழைப்பை அளிப்பேன். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன். புதிய கேப்டனுக்கு என் அனுபவ ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளேன்,” என்று கூறியுள்ளார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: