யூரோ கோப்பை போட்டிகளில் அரங்கேற்றப்பட்ட பெனால்டி சூட் அவுட் நிகழ்வுகள்..

யூரோ கால்பந்து போட்டி

கால்பந்து விளையாட்டில் போடப்படும் கோல்கள் அனைத்தும் சுவாரஷ்யத்திற்கு சற்றும் பஞ்சமில்லாமல் உற்சாகத்தை தூண்டுவதாக அமைகின்றன.

  • Share this:
கால்பந்து விளையாட்டில் போடப்படும் கோல்கள் அனைத்தும் சுவாரஷ்யத்திற்கு சற்றும் பஞ்சமில்லாமல் உற்சாகத்தை தூண்டுவதாக அமைகின்றன. குறிப்பாக பெனால்டி ஷூட்-அவுட்டில் அடிக்கப்படும் கோல் காட்சி, பார்ப்பவர்களின் பிபியை எகிறச் செய்கிறது.

நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  நான்கு முறை  பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியனான ஃபிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட் மூலம் சுவிச்சர்லாந்து அணி வெளியேற்றி கால்பந்து உலகத்தையே அதிர்ச்சியில் உரையவைத்தது.

Also Read:  24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

ஆட்டம் 3க்கு3 என சமனில் முடிய பெனால்டி சூட் அவுட்டில் 5-4 என சுவிட்சர்லாந்து அசத்தல் வெற்றியை பதிவு செய்து காலிறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. பெனால்டி மூலம் காலிறுதிக்கு முன்னேறிய சுவிச்சர்லாந்திற்கு அதே பெனால்ட்டியே தலைவலியாக வந்து அமைந்தது.ஸ்பெயின் அணியுடனான காலிறுதி ஆட்டம் 1-1 என டிராவில் முடிய பெனால்டி சூட் அவுட்டில் 1-3 என தோல்வியடைந்து வெளியேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Also Read:  நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் - பால் போக்பா

இதே போல் காலிறுதியில் பெனால்டி மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணியை இத்தாலி அணி அதே பெனால்டி சூட் அவுட் மூலம் வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் இத்தாலியுடன் முழு நேர ஆட்டத்தில் 1-1 என்று சமன் செய்த இங்கிலாந்து பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இத்தாலி சாம்பியனாக இங்கிலாந்தின் இருதயம் உடைந்தது இப்படி நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  பெனால்டி சூட் அவுட் காட்சிகள் உற்சாகத்தையும், சோகத்தையும், பல்வேறு திருப்பு முனைகளையும் சரித்திர பக்கங்களில் பதிவு செய்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: