24 நாடுகள் போட்டி: உலகமே கொண்டாடும் யூரோ தொடர் இன்று தொடக்கம்

யூரோ கோப்பைக் கால்பந்து முழு அட்டவணை, அணிகள், குரூப்கள்.

ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடுகளில் தங்களில் யார் கால்பந்தில் தலைசிறந்தவர்கள் என்பதை தீர்மானிக்கும் யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்குகிறது.

  • Share this:
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல் உலகில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களையும் வசியப்படுத்தியுள்ளது இந்த போட்டிக்கே உண்டான சிறப்பாகும்.

    1960ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை களைகட்டும் இந்த கால்பந்து திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டு இந்த ஆண்டு போட்டிகள் களைகட்டுகிறது.

    16 வது முறையாக நடைபெறும் இந்த யூரோ திருவிழா ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை 31 நாட்ளில் 51 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ரஷியா, நெதர்லாந்து, ருமேனியா, அங்கேரி, டென்மார்க், ஸ்காட்லாந்து, ஸ்பெயின் ஆகிய 11 நாடுகளில் போட்டிகள் கொண்டாடப்படவுள்ளன.

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 24 நாடுகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் என யூரோ திருவிழா விருந்துபடைக்க காத்திருக்கிறது.

    ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும் இறுதியில் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும், ஆறு பிரிவிலும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளிலுந்து சிறந்த நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு 16 அணிகள் காலிறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லண்டன் வேம்ப்ளி (Wembley) மைதானத்தில் ஜூலை 11ம் தேதி இறுதி போட்டி நட த்தப்படவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்களுக்கு மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50% பார்வையாளர்களுடன் போட்டிகள் களைகட்டவுள்ளன. இந்தியாவில் கொரோனா முடக்கத்தால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கு யூரோ கால்பந்து திருவிழா விருந்து படைக்க காத்திருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30, இரவு 9.30, நள்ளிரவு 12.30 மணி என மூன்று நேரங்களில் போட்டிகள் களைகட்டவுள்ளன.
    Published by:Karthick S
    First published: