இன்று தொடங்குகிறது யூரோ கால்பந்து திருவிழா - உலக ரசிகர்களை கவர்ந்த தொடரின் வரலாறு

யூரோ கோப்பை மாதிரிப் படம்

உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் 2வது இடம் எப்போதும் யூரோ கால்பந்து தொடருக்குதான். 1960ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் இதன் வரலாற்று பின்னணியை தற்போது பார்க்கலாம்.

 • Share this:
  ஐரோப்பிய ஒன்றியங்களில் உள்ள நாடுகளை ஒருங்கிணைத்து ஒரு கால்பந்து தொடரை நடத்த வேண்டும் என்று விரும்பினார் 1927-ல் பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ஹென்ரி டிலாவ்னி (henri delaunay). அவரது ஆசை 1958ல் தான் நிறைவேறியது ஆனால் அதற்குள் அவர் காலமாகிவிட்டார். அதனால் அவரது பெயரிலேயே கோப்பையை வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் ஐரோப்பிய கால்பந்து தொடர் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது.

  மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரான்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இத்தாலி போன்ற முக்கிய நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. சோவியத் யூனியன் உடலான போர் காரணமாக கால் இறுதி போட்டியில் இருந்து ஸ்பெயின் அணி வெளியேறியது. இறுதிப்போட்டியில் யுகோஸ்லாவியாவை வீழ்த்திய சோவியத் யூனியன் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

  1964-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற இந்த தொடரில் 29 அணிகள் பங்கேற்றன. இந்த முறையும் மேற்கு ஜெர்மனி இந்தத் தொடரை புறக்கணித்தது. முதல் தொடரில் போர் காரணமாக சோவியத் யூனியனுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய ஸ்பெயின் அணி இந்த முறை இறுதிப் போட்டியில் அதே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

  1972-ல் நடந்த யூரோ தொடரில் தான் முதன்முறையாக மேற்கு ஜெர்மனி அணி பங்கேற்றது. முதல் தொடரிலேயே வலுவான சோவியத் யூனியனை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு மேற்கு ஜெர்மனி அணி வெற்றியும் கண்டது.

  1976ஆம் ஆண்டுதான் யூரோ கோப்பையில் முதல்முதன்லாக பெனால்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இது ஆட்டத்தின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதி போட்டியில் கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்ததே பெனால்டி ஷூட் தான். மகுடத்திற்கான போட்டியில் மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்ட செகோஸ்லோவியா அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  1980-ல் மேற்கு ஜெர்மனியும் 1984ல் பிரான்சும் 1988ல் நெதர்லாந்தும் கோப்பையை வசப்படுத்தின. 1992-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தான் முதல் முறையாக வீரர்களின் ஜெர்சியில் பெயர்கள் இடம்பெற்றது. மேற்கு ஜெர்மனியாக அதுவரை களமிறங்கி வந்த அணி ஒருங்கிணைந்த ஜெர்மனி ஆனதும் இந்த தொடரில்தான்.

  யூரோ கோப்பை கால்பந்து தொடரை 2000- ஆம் ஆண்டு முதல்முறையாக இரண்டு நாடுகள் ஒன்றிணைந்து நடத்தின. கால்பந்து உலக கோப்பையை வென்ற உற்சாகத்துடன் களமிறங்கிய பிரான்ஸ் அணி, அந்த ஆண்டு யூரோ கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கிரீஸ் அணி வாகை சூடியது

  2008-ம் ஆண்டில் யூரோ கோப்பை புதிதாகவும், முந்தையதை விட பெரியதாகவும் வடிவமைக்கப்பட்டது. 1964-க்குப் பிறகு ஸ்பெய்ன் அணி இந்த தொடரில் கோப்பையை முத்தமிட்டது. 2012-ம் ஆண்டும் கோப்பையை ஸ்பெய்ன் அணியே வென்றது. இதன் மூலம் அதிக முறை யூரோ கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை ஜெர்மனியுடன் பகிர்ந்து கொண்டதுடன், தொடர்ச்சியாக இரு முறை யூரோ கோப்பையை வென்ற அணி என்ற புதிய சாதனையும் படைத்தது ஸ்பெய்ன்.

  2016 ஆம் ஆண்டு போட்டி வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதுவரை எந்த ஒரு முக்கியமான கோப்பையும் வெல்லாத போர்ச்சுகல் அணி முதன் முறையாக யூரோ கோப்பையை முத்தமிட்டது. தொடரின் இறுதிப்போட்டியில் 25 நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். ஆனாலும் ஆட்டத்தின் 109-வது நிமிடத்தில் Eder அடித்த கோலால் 1-0 என பிரான்சை போர்ச்சுக்கல் வீழ்த்தியது.
  Published by:Karthick S
  First published: