EURO 2020 | பாதி போட்டியில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர்: பதறிய வீரர்கள் - கண்ணீர் விட்ட ரசிகர்கள்

மயங்கி விழுந்த வீரரை சுற்றிநிற்கும் வீரர்கள்

யூரோ கோப்பைத் தொடரில் டென்மார்க், ஃபின்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர் திடீரென மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
    ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இத்தாலி அணியும் துருக்கி அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில், இத்தாலி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது புள்ளிக் கணக்கை துவங்கியுள்ளது.

    இந்நிலையில், இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியும் வேல்ஸ் அணியும் மோதின. இரண்டாவது போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. அதேபோல மூன்றாவதாக நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும் ரஷ்யா அணியும் களம் காண்கின்றன.

    இதில் டென்மார்க் அணியும், ஃபின்லாந்து அணியும் மோதிய போட்டி கோபென்ஹாகெனில் தொடங்கியது. போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முதல்பாதியின் இறுதி நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிரிஸ்டியன் எரிக்சென் திடீரென மயக்கம்போட்டு விழுந்து சுயநினைவை இழந்தார். அதனையடுத்து, டென்மார்க் வீரர்கள் எரிக்செனை சுற்றி நின்று அவருக்கு மருத்துவ அவசரம் என்பதை உணர்த்தினர். அதனையடுத்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் கண்ணீர் விட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதனையடுத்து, உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு, எரிக்சென் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, எரிக்செனின் உடல்நிலை சீராக உள்ளது. அவர், தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று டென்மார்க கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் போட்டியில் ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது, நல்ல செய்தி கிடைத்திருப்பது அனைவருக்கும் மனநிம்மதியை கொடுத்துள்ளது. இதனிடையே போட்டி மீண்டும் தொடங்கியது.
    Published by:Karthick S
    First published: