• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • யூரோ கோப்பை: சிகப்பு அட்டை வழங்கப்பட்ட அனைத்து அணிகளும் தோல்வி

யூரோ கோப்பை: சிகப்பு அட்டை வழங்கப்பட்ட அனைத்து அணிகளும் தோல்வி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

யூரோ கோப்பைத் தொடரில் சிகப்பு அட்டை வழங்கப்பட்ட ஐந்து அணிகளும் தோல்வியைத் தழுவியுள்ளன.

  • Share this:
யூரோ கோப்பை கால்பந்து திருவிழாவின் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் இரண்டு அணிகள் தோல்வியின் பிடியில் சிக்கி தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. சிகப்பு அட்டையின் பாதிப்பு குறித்து தெரிந்துகொள்வோம்.

ஐரோப்பிய நாடுகளில் களைகட்டி வரும் யூரோ கோப்பை கால்பந்து திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் மட்டும் ஐந்து சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்ட அந்த ஐந்து அணிகளும் தோல்வியை தழுவியுள்ளன. லீக் சுற்றுகளில் போலந்து மற்றும் வேல்ஸ் அணி வீரர்கள் முரட்டு ஆட்டம் ஆடியதால் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
நாக் அவுட் சுற்று போட்டிகளில் மட்டும் மூன்று சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய மூன்று அணிகளும் தொடரிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே இந்த சிகப்பு அட்டை தான். நாக் அவுட் சுற்றின் முதல் போட்டியில் டென்மார்க்  அணிக்கு எதிராக வேல்ஸ் அணி வீரர் Harry Wilson-க்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து 4-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி டென்மார்க்கிடம் வீழ்ந்து நாக் அவுட் சுற்றோடு நடையை கட்டியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நாக் அவுட் போட்டியில் நெதர்லாந்து – செக் குடியரசு அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் Matthijs சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்களுடன் விளையாடிய நெதர்லாந்து வீரர்கள் 2 கோல் வாங்கி தோல்வியடைந்தனர். லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த நெதர்லாந்து சிகப்பு அட்டையால் நாக் அவுட் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. இத்துடன் நிற்கவில்லை வீரர்களின் முரட்டு ஆட்டம், நாக் அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். பிரதான நேரத்தில் 1-1 என போட்டி சமனில் முடிய வெற்றியை தீர்மானிக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஸ்வீடன் வீரர்  Forsberg தவறு செய்ய போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதை சாதகமாக பயன்படுத்திய உக்ரைன் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து காலிறுதிக்குள் நுழைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால்பந்தில் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வீரர் ஒருவர்  வெளியேறினால் அதன் பாதிப்பு அந்த வீரருக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த அணியையும் நிலைகுழைய செய்யும் என்பதை நிரூபித்திருக்கிறது நடப்பு யூரோ கால்பந்து திருவிழா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: