5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

news18
Updated: September 12, 2018, 1:36 PM IST
5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து வெற்றி
வெற்றி கோப்பையுடன் இங்கிலாந்த் அணி வீரர்கள்
news18
Updated: September 12, 2018, 1:36 PM IST
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற விகிதத்தில் தொடரை வென்றது.  இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக், ஆட்டநாயகனாக ஜொலித்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதன், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.  பின்னர், இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டர் குக், ஜோ ரூட்டின் அசத்தல் சதத்தால், இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 423 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 464 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் என்ற நிலையில், 5-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதனமாக ஆடிய ரஹானே 37 ரன்களிலும், அவரையடுத்து வந்த விஹாரி டக்-அவுட்டாகியும் வெளியேறினர். இருந்த போதும், 6-வது விக்கெட்டிற்கு கைகோர்த்த லோகேஷ் ராகுல் மற்றும் ரிஷாப் பான்ட், சற்று அதிரடியாக ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். அத்துடன் இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அமர்க்களப்படுத்தினர்.

இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், இந்தியா வெற்றிபெறாவிட்டாலும், டிரா செய்துவிடும் என்ற நிலை நிலவியது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிறிது இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்தியா மீண்டும் சரிவை சந்தித்தது.

முடிவில், இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில்  வென்றது. மேலும், கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அலெஸ்டர் குக், சதம் விளாசி இங்கிலாந்து ரன் உயர்வுக்கு வழி வகுத்ததால் ஆட்டநாயகனாக தேர்வாகி, வெற்றியுடன் விடை பெற்றார். தொடர் நாயகன் விருது, இங்கிலாந்தின் சாம் கர்ரன் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்