இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அசத்தலான பரிசு கொடுத்த மல்யுத்த வீரர் HHH!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அசத்தலான பரிசு கொடுத்த மல்யுத்த வீரர் HHH!
மல்யுத்த வீரர் டிரிபிள் ஹச்
  • Share this:
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு மல்யுத்த வீரர் டிரிபிள் ஹச் அசத்தலான் கிஃப்ட் ஒன்றை வழங்கியுள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சூப்பர் ஓவர் வரை சென்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று உலகக் கோப்பை முதன்முறையாக வென்றது.


இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது சர்ச்சைக்குள்ளனதாக இருந்தாலும் அந்த அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரபல மல்யுத்த வீரர் டிரிபிள் ஹச்சும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.மேலும் இங்கிலாந்து அணியின் லோகோ பதிந்த மல்யுத்த சாம்பியன் பெல்ட் உங்களுக்கு தான் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லோகோ உடன் கூடிய பெல்ட்டையும் அனுப்பி வைத்துள்ளார்.இந்த பெல்ட்டை வீரர்கள் தங்களது கையில் வைத்துள்ளது போன்ற புகைப்படத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Also Watch

First published: August 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading