தங்கம் வென்ற இளவேனிலின் வெற்றியை கொண்டாடிய தாத்தா, பாட்டி!

சிறுவயது முதலே இளவேனில் துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்டவர் என்றும், அவர் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவரது தாத்தா கூறியுள்ளார்.

news18
Updated: August 29, 2019, 4:55 PM IST
தங்கம் வென்ற இளவேனிலின் வெற்றியை கொண்டாடிய தாத்தா, பாட்டி!
இளவேனில் வாலறிவான்
news18
Updated: August 29, 2019, 4:55 PM IST
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்.

கடலூரை பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன், குஜராத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்று வரும் போட்டியிலும் பங்கேற்றார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளவேனில் மொத்தமாக 251.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்தார்.


Also see... உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

இதன்மூலம் உலகக்கோப்பை  துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் மிஷிண்டோஷ் வெள்ளியும், சீன தைபேவின் யங் - லின்ஷின் வெண்கலமும் வென்றனர். இளவேனிலின் வெற்றியை கடலூரில் உள்ள அவரது தாத்தா, பாட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Loading...

இனிப்பு வழங்கி கொண்டாடும் இளவேனில் தாத்தா மற்றும் பாட்டி


சிறுவயது முதலே இளவேனில் துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்டவர் என்றும், அவர் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவரது தாத்தா கூறியுள்ளார்.

இளவேனிலின் தாத்தா மற்றும் பாட்டி


பேத்தியின் வெற்றி குறித்து பேசிய பாட்டி கிருஷ்ணவேணி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

Also see...

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...