Home /News /sports /

பிரெஞ்ச் ஓபன் 2019 : முதல்நிலை வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் 2019 : முதல்நிலை வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

ஜோக்கோவிச்

ஜோக்கோவிச்

#FrenchOpen2019 | Novak Djokovic | Dominic Thiem | முழு திறனையும் வெளிப்படுத்திய தியம் 7-5 ஜோக்கோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனின் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

  • News18
  • Last Updated :
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் முதல்நிலை வீரரான ஜோக்கோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.

பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச்சும் தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரிய வீரர் டொமனிக் தியம் மோதினார்.

இருவரும் ஆக்ரோஷமாக விளையாடியதால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்றது. முதல் சுற்றை 6-2 என தியம் கைப்பற்ற அதை சுற்றை 3-6 என ஜோக்கோவிச் கைபற்றினார். அடுத்தடுத்த சுற்றை 7-5, 5-7 என இருவரும் மாற்றி மாற்றி கைப்பற்றினார்.

வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி சுற்றில் முழு திறனையும் வெளிப்படுத்திய தியம் 7-5 ஜோக்கோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனின் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. பிரெஞ்ச் ஓபன் இறுதி போட்டியில் நடாலும், தியமும் பலப்பரிட்சை நடத்த உள்ளனர்.
Published by:Vijay R
First published:

Tags: French open Tennis 2019, Novak Djokovic

அடுத்த செய்தி