மல்யுத்த களத்தில் குதித்த ஜோகோவிச்!

மல்யுத்த களத்தில் குதித்த ஜோகோவிச்!
  • Share this:
டென்னிஸ் களத்தில் மட்டுமே சூறாவளியாக சுழன்று வரும் உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச், முதல் முறையாக மல்யுத்த களத்தில் அடி எடுத்துவைத்தார்.

டென்னிஸ் அரங்கில் 16 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் ஜப்பான் ஓபனில் கலந்துகொள்ள டோக்கியோ சென்றுள்ளார்.

டென்னிஸ் போட்டிகளுக்கு இடையே சுமோ மல்யுத்த போட்டியை கண்டுகளித்த அவர், ஆர்வத்தில் களத்தில் புகுந்து வீரர்களிடம் மல்யுத்த நுணுக்கங்களை கற்றார்.
மல்யுத்த அனுபவம் குறித்து ஜோகோவிச் கூறுகையில், ''இது ஒரு சிறந்த அனுபவம். இந்த அனுபவத்தை நான் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை. மல்யுத்த போட்டிகள் பார்பதற்கு மிகவும் சுவாரஸ்மயமாக இருக்கிறது.

அதிக எடை கொண்டவர் விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் மூட்டுக்களின் நகர்வு மற்றும் போட்டியின் நுணுக்கத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மல்யுத்த போட்டி நிச்சயமாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்'' என்றார்.

Loading...

Also Watch : 5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை

First published: October 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...