Tokyo Olympics | தங்கம் வென்று கெத்து காட்டிய தீஸ்திரியா க்ராஸ்னிக்.. கொண்டாட்டத்தில் கொசவோ

Distria

இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றது என்பது விளையாட்டில் சிறந்த ஒன்று

  • Share this:
    தீஸ்திரியா க்ராஸ்னிக் வெற்றி நான் உனக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவள் இல்லை என உலகுக்கு உரக்க சொல்லியுள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார் கொசவோ (kosovo) நாட்டைச் சேர்ந்த தீஸ்திரியா க்ராஸ்னிக் (Distria Krasniqi). உலக அரங்கில் தன் நாட்டின் தேசியக் கொடி உயரப்பறந்ததை கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். சிறிய நாடான கொசவோ செர்பியாவுக்கு அருகில் இருக்கிறது.

    Kosovo distira


    Also Read:  Tokyo Olympics| ஒலிம்பிக்கில் வெற்றியுடன் தடம்பதித்த பவானி தேவி உலக நம்பர் 3 வீராங்கனையிடம் தோல்வி

    செர்பியாவின் ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த நாடு 2008-ம் ஆண்டு சுதந்திர காற்றை சுவாசித்தது. ரஷ்யா, செர்பியா உள்ளிட்ட நாடுகள் கொசவோ-வை ஒருநாடாக அங்கீகரிக்க இன்றளவும் மறுக்கிறது. சுதந்திரம் அடைந்து 13 ஆண்டுகளே ஆனபோதிலும் ஒலிம்பிக் போட்டிகளில் இது கொசவோவுக்கு இரண்டாவது தங்கம். எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்காமல் வெறும் கையோடு திரும்பும் சூழலில் கொசவோ நாட்டு வீராங்கனைகள் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை தட்டி அந்நாட்டு பெருமை சேர்த்து வருகின்றனர்.

    kosova flag in olympics


    Also Read: Tokyo Olympics 2020: ஒலிம்பிக் -நம்பிக்கையளிக்கும் பிவி சிந்து!

    தீஸ்திரியா க்ராஸ்னிக் வெற்றியை ஒட்டுமொத்த கொசவோவும் கொண்டாடித் தீர்ந்தது. அண்டை நாடான அல்பினியாவும் தீஸ்திரியா க்ராஸ்னிக் வெற்றியை கொண்டாடுகிறது. 2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் கொசவோ நாடு பங்கேற்றது. ஜூடோ போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் மஜ்லிந்தா கேல்மந்தி (

    Majlinda Kelmendi


    ) என்பவர் கொசவோ நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். டோக்கியோவவில் தீஸ்திரியா க்ராஸ்னிக் தங்கம் வென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தீஸ்திரியா க்ராஸ்னிக் பயிற்சியாளர் ட்ரைடன் குகா (Driton kuka) பேசுகையில், “தீஸ்திரியா பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் தங்கப்பதக்கம் வென்றது உண்மையில் மிகப்பெரியது. இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றது என்பது விளையாட்டில் சிறந்த ஒன்று” என்றார்.

    இந்த வெற்றி குறித்து பேசிய தீஸ்திரியா க்ராஸ்னிக், “ இந்த பதக்கம் எனது நாட்டிற்கும், குடும்பத்துக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். ஜப்பானியர்களுக்கு எதிரான இந்தப்போட்டி மிகவும் கடினமான போராட்டமாக இருந்தது. ஏனெனில் ஜாப்பான் ஜூடோவில் சிறந்தவிளங்கும் நாடு” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: