ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்காத 2 வீரர்கள்... இந்திய அணியிலிருந்து நீக்கம்

ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்காத 2 வீரர்கள்... இந்திய அணியிலிருந்து நீக்கம்
இந்திய அணி
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் மோசமாக விளையாடியதால் 2 வீரர்களுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல் 2020 தொடர் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐ.பி.எல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. டெல்லி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் காயம் காரணமாக சில வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.


Also Read : சூர்யகுமார் யாதவ் மனைவி தேவிஷா குறித்து உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக டி20 போட்டியில் சேலத்தை சேர்ந்த நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேப்போன்று விருதமான் சஹாவுக்கு பதிலாக  சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது போன்று மோசமாக விளையாடியவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபே மற்றும் கேதர் ஜாதவ் தற்போது இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளனர்.Also Read : யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி..!

சி.எஸ்.கே அணியில் மோசமாக விளையாடிய கேதர் ஜாதவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய ஜாதவ் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேப் போன்று கேப்டன் விராட் கோலியின் அணியான ஆர்.சி.பி-யில் இடம் பெற்றிருந்த ஷிவம் துபே 11 போட்டிகளில் விளையாடி 129 ரன்கள் மற்றும் 4 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இதனால் ஐ.பி.எல் தொடரில் மோசமாக விளையாடி இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணயத்தில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading