ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஏமாற்றமளித்த தீபா கர்மாகர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஏமாற்றமளித்த தீபா கர்மாகர்

தீபா கர்மாக்கர்

தீபா கர்மாக்கர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

  இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற இந்தியாவின் தீபா கர்மாக்கர், 12.500 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தைப் பிடித்தார்.

  முன்னதாக இப்போட்டிக்கான தகுதிச் சுற்றில் அவர் 12.750 புள்ளிகள் பெற்றார் . ஜிம்னாஸ்டிக்கின், பேலன்சிங் பீம் பிரிவைச் சேர்ந்த இப்போட்டியில், சீனாவின் சென் யீல் தங்கம் வென்றார். வட கொரியாவின் கிம் ஜாங் சு(13.400) மற்றும் சீனாவின் ஜாங் ஜின்(13.325) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

  முழு உடற்தகுதி பெறாத நிலையில் போட்டிகளில் பங்கேற்ற தீபா, மற்றொரு ஜிம்னாஸ்டிக் போட்டியான வால்ட் பிரிவின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டியில் இதே வால்ட் பிரிவில்தான் தீமா கர்மாகர் 4-ம் இடம் பிடித்தார். ஆண்கள் ஜிம்னாஸ்டிக் பிரிவிலும் இந்திய வீரர்கள் தோல்வியைத் தழுவினர்.

  இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆஷிஷ் குமார் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Asian Games 2018