வெஸ்ட் இண்டீஸுக்குச் சென்ற விவகாரம்! பி.சி.சி.ஐ.யிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில் அந்த அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார்.

news18
Updated: September 8, 2019, 4:42 PM IST
வெஸ்ட் இண்டீஸுக்குச் சென்ற விவகாரம்!  பி.சி.சி.ஐ.யிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
news18
Updated: September 8, 2019, 4:42 PM IST
கரிபியன் பிரிமியர் லீக் போட்டியை நேரில் சென்று பார்த்தது தவறுதான் என்று பி.சி.சி.ஐயிடம் தினேஷ் கார்த்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் டி-20 போட்டிகள் போலவே வெஸ்ட் இண்டீஸில், கரிபியன் பிரீமியர் லீக் டி-20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உரிமையாளராவர். தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஷாருக்கான்தான் உரிமையாளர்.

பிசிசிஐ நோட்டீஸ்... தினேஷ் கார்த்திக்கிற்கு சிக்கல்....!


இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரிபியன் பிரீமியர் லீக் டி-20 போட்டியை பார்வையிடுவதற்கு சென்ற தினேஷ் கார்த்திக், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில் அந்த அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். அவருடன் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்திய அணியின் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதியளிக்கவில்லை. இந்தநிலையில், தினேஷ் கார்த்திக்கு ஏன் அங்கு சென்றார் என்பது சர்ச்சையானது. இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கு பி.சி.சி.ஐ நோட்டிஸ் அனுப்பியிருந்தது.

அந்த நோட்டிஸ்க்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்தான் டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். அவருடைய அழைப்பின் பேரிலேயே நான் அங்கு சென்றேன். அங்கே, நான் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறமால் அங்கே சென்றது தவறுதான்’ என்று தெரிவித்தார்.

Loading...

Also see:

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...