"நேராக பந்துவீச" தமிழில் அறிவுரை கூறிய தினேஷ்...சொல்படி நடந்த வருண்

தினேஷ் கார்த்திக் சொல்படி நடந்த வருண்

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது அணி வீரர் வருணுக்கு தமிழில் ஆலோசனை கூறியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 • Share this:
  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் தமிழக வீரர் வருண் இடம்பிடித்திருந்தார். துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியபோது, டிவாட்டியா மட்டும் ராஜஸ்தானுக்கு நம்பிக்கை அளித்தார்.

  அப்போது அவரின் விக்கெட்டை சாய்க்க வருணிடம், பந்தை நேராக ஸ்டம்ப்பை நோக்கி போடும்படி தினேஷ் கார்த்திக் தமிழில் கூறினார். இந்த குரல் பதிவு நேரலையில் ஒளிபரப்பானது.

  தினேஷ் கார்த்திக்கின் அறிவுரைப்படியே பந்தை நேராக செலுத்திய வருண் சக்ரவர்த்தி டிவாட்டியாவை ஆட்டமிழக்கச் செய்தார்.

     இதனை தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: