ஐ.பி.எல் 2021 வெற்றியாளர் யார்? தோனியின் டிவிட்டை தோண்டி எடுத்த CSK ரசிகர்கள்!

ஐ.பி.எல் 2021 வெற்றியாளர் யார்? தோனியின் டிவிட்டை தோண்டி எடுத்த CSK ரசிகர்கள்!

தோனி

ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 9 ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தோனியின் பழைய டிவிட் ஒன்றை ரசிகர்கள் தோண்டி எடுத்து டிரெண்டாக்கியுள்ளனர்.

  • Share this:
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல் இருப்பதால், வழக்கம்போல் அதீத எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் எந்த அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, சிறந்த லெவன்ஸைக் கொண்ட அணி எது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் யூகங்களும் சமூக வலைதளங்களில் ரக்கை கட்டி பறக்கின்றன.

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கசப்பாக அமைந்ததால் இந்த ஆண்டு தொடரில் அவர்கள் மீண்டு வருவார்கள் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இது தொடர்பான விவாதம் ஒன்று இணையத்தில் பரவிக்கொண்டிருந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தோனி பதிவிட்ட டிவிட் ஒன்றை ரசிகர்கள் தோண்டி எடுத்து வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/msdhoni/status/447825958012473344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1377559796480532480%7Ctwgr%5E%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fdhoni-fans-dig-out-csk-skippers-7-year-old-tweet-hilariously-predict-the-loser-of-ipl-2021-3596363.html

அதாவது, ஐ.பி.எல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி, "எந்த அணி வெற்றுபெறுவது என்பது முக்கியமல்ல, நான் இங்கு என்டர்டெய்மென்ட் பண்ணுவதற்காக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தோனி பதிவிட்ட அந்த டிவிட்டை எடுத்துள்ள ரசிகர்கள், தோனியின் இந்த ஆண்டு ஆட்டம் இதனைக் குறிக்கோளாக் கொண்டு தான் இருக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் நடைபெற்றது. அந்த தொடரில் சென்னை அணி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, திடீரென தொடரில் இருந்து பாதியில் விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார். தோனியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் நாடு திரும்பியதாக கூறப்பட்டது. பின்னர், சொந்த காரணத்துக்காக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியதாக ரெய்னா விளக்கம் அளித்தார்.

மற்றொரு வீரரான சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜனும் சென்னை அணியில் இருந்து விலகினார். மேலும், அந்த தொடரில் வீரர்களின் மோசமான செயல்பாடு காரணமாக ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் பழைய ஆக்ரோஷத்தைக் காண முடியும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: