Home » News » Sports » DHONI EATING STRAWBERRY AND POSTED A VIDEO ON INSTAGRAM AFTER A LONG TIME SCS

’தினமும் வந்தா ஒண்ணு கூட மிஞ்சாது’ வைரலாகும் தோனியின் வீடியோ!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பண்ணை விவசாயத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் தோனி.

’தினமும் வந்தா ஒண்ணு கூட மிஞ்சாது’ வைரலாகும் தோனியின் வீடியோ!
எம் எஸ் தோனி
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 21 வாரங்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பண்ணை விவசாயத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் தோனி. அவர் 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தான் கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பிறகு 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்றார். தற்போது தீவிர விவசாயியாக மாறியுள்ளார் தோனி.





 



View this post on Instagram





 

A post shared by M S Dhoni (@mahi7781)






விவசாயத்தில் மட்டுமல்லாமல், கோழி வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நிலத்தில் விளைந்த பழங்களும், காய்கறிகளும் துபாய்க்கு ஏற்றுமதியாவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தோனி.

மொபைலில் வீடியோ எடுத்திருக்கும் தோனி, தனது தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விளைந்திருப்பதை காட்டுகிறார். பின்னர் ஒரு பழத்தை பிடுங்கி சாப்பிடுகிறார். ”நான் இப்படி தினமும் பண்ணைக்கு சென்றால் சந்தைக்கு அனுப்ப ஒரு ஸ்ட்ராபெர்ரி கூட மிஞ்சாது” என்ற தலைப்பில் அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். தோனியின் இந்த வீடியோவை தற்போது வரை 8.6 மில்லியன் பார்வையாளர்கள் லைக் செய்திருக்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 10, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading