மைதானப் பராமரிப்பாளராக மாறிய தோனி! வைரலாகும் வீடியோ

மைதானப் பராமரிப்பாளராக மாறிய தோனி! வைரலாகும் வீடியோ
தோனி
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மைதானத்தில் ‘பிட்ச் சரி செய்யும்’வண்டியை ஓட்டி மகிழும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 8 மாதங்களாக சர்வதேச அரங்கில் களமிறங்காவிட்டாலும், அவரது பெயர் செய்திகளில் இடம்பிடிக்கத் தவறுவதில்லை. அவர் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகள் எதிலும் கூட பங்கேற்காததால் அவரது ரசிகர்கள் அவரது ஆட்டத்தை களத்தில் காண நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஐபிஎலில் அவர் ஆடும் விதத்தைப் பொறுத்தே சர்வதேச அரங்கில் அவரது மறுபிரவேசம் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஏனெனில் ஐபிஎலுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் 20-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே, ஐபிஎல்லில் தோனி சோபிக்கும் பட்சத்தில் அவர் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

காரணம், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியை நெருங்கிவிட்டதாகவே பார்க்கப்பட்டது. ஆகவே வரும் ஐபிஎல் தொடரைப் பொறுத்தே அவரது மறுபிரவேசம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்நிலையில் ஐபிஎலில் சென்னை அணிக்கு தலைமை தாங்கும் தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார். ஒருபக்கம், மீண்டும் அவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவ, சமீபத்தில் ஜார்க்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி செய்ய வந்த தோனி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ’பிட்சை சரி செய்யும் உருளை’போன்ற வாகனத்தை ஓட்டி மகிழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தோனியின் அதிகாரப்பூர்வ ரசிகர்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ’ஒரு மனிதன் பல பங்களிப்பு’ என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்ட அந்த வீடியோவிற்கு தற்போது தோனியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தோனி கடைசியாக ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கெதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Also see:
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading