Home /News /sports /

செஸ் ஒலிம்பியாட் பதக்கங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது?

செஸ் ஒலிம்பியாட் பதக்கங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது?

 பதக்கத்தின் ஒருபுறம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சின்னமும், மற்றொருபுறம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளன

பதக்கத்தின் ஒருபுறம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சின்னமும், மற்றொருபுறம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளன

பதக்கத்தின் ஒருபுறம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சின்னமும், மற்றொருபுறம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு, மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த போட்டி அமைந்துள்ளது.. 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் அங்கு சங்கமித்துள்ளனர்.

    சர்வதேச செஸ் சம்மேளனமே இதுவரை கண்டிராத வகையில் மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. மேலும், பிரத்யேகமாக ஐஏஎஸ் அதிகாரிகளை தனித்தனியே நியமித்து, ஒலிம்பியாட் போட்டியை ஒருங்கிணைத்துள்ளது.முதல் பாதி ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெற்றியாளர்களின் கழுத்தை அலங்கரிக்கும் பதக்கங்கள், சுற்றுலாத்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாதிரி பதக்கங்களுக்கு சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.

    பதக்கம் 7 சென்டி மீட்டர் சுற்றளவு கொண்டது என்றும், ஒவ்வொன்றும் 110 கிராம் எடையில் வடிவடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் சந்திரமோகன் தெரிவித்தார். பதக்கத்தின் ஒருபுறம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சின்னமும், மற்றொருபுறம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளன என்றார். இது, சர்வதேச தரத்தில் மிக நுணுக்கமாக வடிமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 9-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, பத்தாம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற உள்ளது. அப்போது, கலை நிகழ்ச்சிகளுடன், வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chess Olympiad 2022, Medal winners

    அடுத்த செய்தி