Tokyo Olympics : ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்றில் தீபிகா குமாரி 9வது இடம்

தீபிகா குமாரி

டோக்யோ ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். 

  • Share this:
டோக்யோ ஒலிம்பிக் (Tokyo Olympics) தொடரின் வில்வித்தை தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.  அடுத்த சுற்று போட்டியில் ஒலிம்பிக் தொடரை வெற்றியுடன் தொடங்கி இந்திய வீரர்களுக்கான உற்சாகத்தை அதிகரித்திருக்கிறார் தீபிகா குமாரி.

விளையாட்டு உலகின் உட்சபட்ச திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இன்று முதல் டோக்கியோவில் கொண்டாடப்படு வருகிறது. இந்தியாவிற்காக முதல் போட்டியில் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகளிர் ஒற்றைய பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் 64 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 663 புள்ளிகளை பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 இடத்தை தட்டிச்சென்றார்.

Must Read : டோக்யோ ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை தகுதி சுற்றுப்போட்டியில் தீபிகா குமாரி வெற்றி

அடுத்த சுற்று ஆட்டத்தில் தீபிகா குமாரி – பூடான் வீராங்கனை கர்மாவுடன் மோதவுள்ளார். இந்த போட்டி 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் மூன்று இடங்களை தென் கொரிய வீராங்கனைகள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.  680 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அன் சேன் புதிய ஒலிம்பிக் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
Published by:Suresh V
First published: