எதிரணியின் பிடியில் சிக்கி 'மூச்சை' விட்ட கபடி வீரர்... மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நிகழ்ந்த பரிதாபம்
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் எதிரணியின் பிடியில் சிக்கி மைதானத்திலேயே சரிந்து விழுந்து 'மூச்சை' விட்டுள்ளார் கபடி வீரர் ஒருவர்.

கபடி (கோப்பு படம் )
- News18 Tamil
- Last Updated: January 18, 2021, 7:37 AM IST
ஆந்திராவில் நடைபெற்ற கபடி போட்டியில் முதுநிலை பட்டதாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடப்பா மாவட்டத்தில் உள்ள கங்கன்ன பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில், நரேந்திரா என்பவர் ரெய்டு சென்றது போது, எதிரணியினரிடம் பிடிபட்டார். எதிரணியினரின் கிடுக்குப் பிடியில் சிக்கிய நரேந்திரா கபடி, கபடி என பாடுவதை நிறுத்தினார். பின்னர் எழுந்து இரண்டு எட்டு வைப்பதற்குள் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, நரேந்திராவை மீட்டு உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்