Home » News » Sports » DAVID WARNER SPECIAL GREETINGS IN DARBAR RAJINI STYLE SCS

புத்தாண்டை முன்னிட்டு ரஜினி ஸ்டைலில் டேவிட் வார்னர் வித்தியாச வாழ்த்து

சில தினங்களுக்கு முன்பு தமிழர் கெட்டப்பில் தான் இருப்பது போல வரையப்பட்ட படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

புத்தாண்டை முன்னிட்டு ரஜினி ஸ்டைலில் டேவிட் வார்னர் வித்தியாச வாழ்த்து
ரஜினிகாந்த் - டேவிட் வார்னர்
  • Share this:
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், ஃபேஸ் ஆப் மூலம் ரஜினியாக தான் மாறியிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இவர் ஐ.பி.எல் தொடரில் ஐதரபாத் அணிக்கு கேப்டனாகவும் உள்ளார். தென்னிந்தியர்கள் மீது அதிக பிரியம் கொண்ட வார்னர்,  அடிக்கடி அதோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்வார். அல்லு அர்ஜூனின் 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.





 



View this post on Instagram





 

A post shared by David Warner (@davidwarner31)






பின்னர் பாகுபலி திரைப்பட கெட்டப்பிலும் வீடியோ வெளியிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தமிழர் கெட்டப்பில் தான் இருப்பது போல வரையப்பட்ட படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அப்போது எனது இரண்டாவது வீடு இந்தியா என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் 'நா தான்டா இனிமேலு' என்ற பாடலில், ஃபேஸ் ஆப் மூலம் தனது முகம் இருக்கும் படியான வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார் டேவிட் வார்னர்.  'நிறைய பேரின் வேண்டுகோளுக்கு இணங்க... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 1 மணி நேரத்தில் இந்த வீடியோவை 8 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 1, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories