மருத்துவ பணியாளர்களுக்காக தலை முடியை ஷேவ் செய்த வார்னர்... கோலிக்கும் அழைப்பு

மருத்துவ பணியாளர்களுக்காக தலை முடியை ஷேவ் செய்த வார்னர்... கோலிக்கும் அழைப்பு
டேவிட் வார்னர்
  • Share this:
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை ஷேவ் செய்துக் கொண்டார்.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 170 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. தற்போது சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட போதும் மற்ற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் தீவிரமாக பரவி வருகிறது.


கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வரும் மருத்துவ பணியாளர்களுக்காக தனது தலைமுடியை ஷேவ் செய்து கொண்டுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.தனது சகநாட்டு வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும் வார்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading