ஐபிஎல் 2021 : சென்னை சேப்பாக்கத்தில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சி

எம்.எஸ்.தோனி

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • Share this:
  நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை இந்தியாவின் ஆறு நகரங்களில் களைகட்டவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தற்போது இருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தவிற மற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணியுடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.

  கடந்த 4 ம் தேதி சென்னை வந்த தோனி ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்றுமுதல் வலைபயிற்சியை தொடங்கினார். தோனி தலைமையில் அம்பதி ராயுடு, கெய்க்வாட்,  தமிழக வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

   
  Published by:Ram Sankar
  First published: