`சிஎஸ்கே’ டிக்கெட் வடிவில் திருமண பத்திரிகை அடித்த தீவிர தோனி ரசிகர்!

news18
Updated: September 12, 2018, 9:07 PM IST
`சிஎஸ்கே’ டிக்கெட் வடிவில் திருமண பத்திரிகை அடித்த தீவிர தோனி ரசிகர்!
கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவிலான திருமண பத்திரிகை
news18
Updated: September 12, 2018, 9:07 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண பத்திரிகையை கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவில் அச்சடித்துள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் கே.வினோத். இவர் ஜி.என்.சாதனா என்பவரை இன்று திருமணம் செய்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், தனது திருமண பத்திரிகையை வித்தியாசமான முறையில் அச்சடிப்பது என முன்னதாக முடிவு செய்டிருந்தார்.

இதன்படி, பத்திரிகையை கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வடிவில் வடிவமைத்தார். இதுதொடர்பாக, வினோத் கூறியதாவது: தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனான நான், எனது திருமண பத்திரிகையை புதுமையான முறையில் வடிவமைக்க நினைத்தேன். இதுகுறித்து எனது நண்பரிடம் பேசினேன். கிராஃபிக் டிசைனராக பணிபுரிந்துவரும் அந்த நபரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான்.

நான் ஏற்கெனவே, சிஎஸ்கே அணி தொடர்பாக சில வீடியோக்களை தயார் செய்தேன். கடந்த 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற கடைசி ஆட்டத்தின்போது, அணியின் அதிகாரிகள் என்னை அழைத்து தோனி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர் என்றார் வினோத்.

இதனிடையே, வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து சிஎஸ்கே அணி  தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்