பிஃபா சர்வதேச விருது: குரோஷிய அணி கேப்டன் தட்டிச் சென்றார்

news18
Updated: September 25, 2018, 9:54 AM IST
பிஃபா சர்வதேச விருது: குரோஷிய அணி கேப்டன் தட்டிச் சென்றார்
குரோஷிய அணி கேப்டன் லூகா மோட்ரிச்
news18
Updated: September 25, 2018, 9:54 AM IST
சிறந்த கால்பந்து வீரருக்கான சர்வதேச விருதை குரோஷிய அணி கேப்டன் லூகா மோட்ரிச் தட்டிச் சென்றார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சார்பில், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, குரோஷியாவின் லூகா மோட்ரிச் மற்றும் எகிப்தின் முகமது சலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில், நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில், குரோஷிய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று சாதனை படைத்த மோட்ரிச் அதிக புள்ளிகள் பெற்று சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். மேலும், சிறந்த வீராங்கனைக்கான விருதை பிரேசில் அணியின் மார்டா வென்றார். அத்துடன், பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கிய அந்த அணியின் பயிற்சியாளர் டைடியர் டெஸ்சாம்ப்ஸுக்கு சிறந்த பயிற்சியாளருக்கான விருது வழங்கப்பட்டது.
First published: September 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...