கொட்டும் மழையில் வீரர்களுக்கு வாழ்த்து: ரசிகர்களின் மனதை வென்ற குரோஷிய அதிபர்

news18
Updated: July 16, 2018, 1:18 PM IST
கொட்டும் மழையில் வீரர்களுக்கு வாழ்த்து: ரசிகர்களின் மனதை வென்ற குரோஷிய அதிபர்
கொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கும் குரோஷிய அதிபர்
news18
Updated: July 16, 2018, 1:18 PM IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் குரோஷிய அணி  தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல அந்நாட்டின் அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக்கும் தனது செயலால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

சிறிய நாடான குரோஷியா உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி உலகில் உள்ள ஒவ்வொரு ரசிகரையும், தன் பக்கம் ஈர்த்தது. நேற்று விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி வென்றது. ஆட்டத்தை நேரில் காண ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ஆகியோர் கலந்துகொண்டனர். கொலிண்டா குரோஷிய அணியின் ஜெர்சியை அணிந்து வந்திருந்தார். தொடக்கம் முதலே தனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

 இதையடுத்து தனது நாடு தோல்வியடைந்தாலும் அனைத்து வீரர்களையும் கொட்டும் மழையில் கொலிண்டா கட்டி அணைத்தார். ஃபிரான்ஸ் அதிபருக்கு குடை பிடித்திருந்த நிலையில் மழையில் நனைந்தபடியே தனது வீரர்களை உற்சாகப்படுத்திய அவரது செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  

 

First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...