கால்பந்து உலகின் ஜாம்பவானான ரொனால்டோ, நான்கு அடி உயரத்தில் பறந்து, புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடுக்கும் வகையில் அடித்த கோல் ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலி SERIE A கிளப் தொடரின் முக்கிய ஆட்டத்தில், சம்ப்டோரியா- யுவென்டஸ்(JUVENTUS) அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கு நிலவி வந்தபோது, JUVENTUS அணியின் ரொனால்டோ, காற்றில் பறந்து, தலையில் பந்தை முட்டி அடித்த கோல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரொனால்டோவின் shot-ஐ கண்டு வியந்த அவரது ரசிகர்கள், அந்த கோல்-ஐ ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து, ரொனால்டோவை புகழ்ந்து வருகின்றனர்.
Also Read : "என்னது... தலைவன் Unsold ah..." இணையத்தை கலக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீம்ஸ்
மேலும் உலகின் சிறந்த HEADER AND FLYER என்றும் புகழாரம் சூட்டினர். SERIE A கிளப் தொடரில் இதுவரை ரொனால்டோ 10 கோல்களை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.