ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

news18
Updated: July 11, 2018, 7:57 PM IST
ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
news18
Updated: July 11, 2018, 7:57 PM IST
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவண்டஸ் அணிக்கு மாறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கால்பந்து உலகின் தவிர்க்க முடியாத பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. தேசிய அணிக்காக ரொனால்டோ ஆடிய போது கூட பெயரும், புகழும் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக அவர் விளையாடிய போதுதான் கிடைத்தது. 9 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய ரொனால்டோவை  இத்தாலியின் யுவண்டஸ் அணி 850 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ரியல் மாட்ரிட்  அணிக்காக 438 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 451 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இரண்டு முறை லா லீகா சாம்பியன், நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரின் சாம்பியன், மூன்று கிளப் உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் என அந்த அணியை உச்சம் தொட வைத்தார்.  இதனால் ரொனால்டோ என்றால், ரியல் மாட்ரிட்  ரியல் மாட்ரிட்  என்றால் ரொனால்டோ என ரசிகர்கள் கொண்டாடினர். இதனால்தான் அவரின் இந்த முடிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...