உலகிலேயே முதல் நபராக இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோவர்ஸைப் பெற்ற ரொனால்டோ..!

உலகிலேயே முதல் நபராக இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோவர்ஸைப் பெற்ற ரொனால்டோ..!
  • Share this:
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியனா ரொனால்டோ களத்தில் பல சாதனைகளை படைத்துள்ளதை தாண்டி தற்போது களத்திற்கு வெளியேயும் பல சாதனைகளை படைத்துவருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை  20 கோடியை தாண்டியுள்ளது.

போர்ச்சுகீஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஒன்பது ஆண்டுகள் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய அவர், தற்போது ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஜுவாண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ரியல் மேட்ரிட் அணிக்காக தான் களம் கண்ட 292 போட்டிகளில் 311 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளும் இந்த சாதனைப்பட்டியலில் அடங்கும். தற்போது ஜீவாண்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரொனால்டோ 18 ஆட்டங்களில் 17 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோ ஜீவாண்ட்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கியது இத்தாலியில் அவருக்கு பெருவாரியான ரசிகர்களைப் பெற்றுத்தரத் தொடங்கியது.


ஏற்கனவே பிரபலமான கால்பந்தாட்ட வீரர் என்பதால் உலகெங்கும் உள்ள அவரது பெருவாரியான ரசிகர்கள் அவரை சமூகவலைதளத்தில் பின்தொடர்வதும், அவர் அவ்வப்போது பேசுபொருளாவதும் வாடிக்கையே.

இருப்பினும் இதில் தற்போது புதிய மைல்கல்லாக இன்ஸ்டாகிராமில் அவரை பிந்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டியுள்ளது. இதுவரை இந்த பெருமை யாருக்கும் கிடைக்காத நிலையில் பல சினிமா நட்சத்திரங்கள், உலக அரசியல் தலைவர்கள் என எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி தற்போது உலகிலேயே அதிக நபர்களால் பின்தொடரப்படுபவர் என்ற சாதனைக்குச் சொந்தர்காரர் ஆகியுள்ளார் ரொனால்டோ.


 




View this post on Instagram




 

Wow 200 million!!! Thank you to each and every one of you for sharing this journey with me every day!!👏🏽❤️


A post shared by Cristiano Ronaldo (@cristiano) on






இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த வீடியோவும் அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டது.

இவருக்கு அடுத்து பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டே 171 மில்லியன் எண்ணிக்கையோடு இரண்டாமிடத்திலும், பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் டுவைன் ஜான்சன் 168 மில்லியன் என்ற எண்ணிக்கையோடு மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்