Home /News /sports /

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை அடித்த சிறந்த மின்னல்வேக கோல்களின் தருணங்கள்!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை அடித்த சிறந்த மின்னல்வேக கோல்களின் தருணங்கள்!

Cristiano Ronaldo. (Photo Credit: Reuters)

Cristiano Ronaldo. (Photo Credit: Reuters)

கால்பந்தின் சூப்பர் ஸ்டார் இதுவரை பல கோல்களை அணிக்காக அடித்துள்ளார். அதில், சிறந்த 10 கோல்களை பற்றி இந்த செய்திக்குறிப்பில் காண்போம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சீரி ஏ கிளப் ஜுவென்டஸுக்கு முன்னோடியாக விளையாடுகிறார் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டனாக உள்ளார். பிப்ரவரி 5, 1985ல் பிறந்த, இவர் பெரும்பாலும் ‘எல்லா காலத்திலும் சிறந்தவர்’ (G.O.A.T) என்று அழைக்கப்படுகிறார்.  2003ம் ஆண்டில் புகழ்பெற்ற பிரீமியர் லீக் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட்டுக்குச் செல்வதற்கு முன்பு ஸ்போர்ட்டிங் சிபியுடன் (Sporting CP) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ரொனால்டோ 2003ம் ஆண்டு தனது 18 வயதில் போர்ச்சுகலுக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். விளையாட்டில் தனது திறமையால் 170 கேப்களை பெற்றார். அவர் போர்ச்சுகலின் அதிக எண்ணிக்கையிலான கேப்களை பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர். ஜூலை 2008ல் தேசிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த யுஇஎஃப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் 2019 யுஇஎஃப்ஏ தேசிய லீக் ஆகிய போட்டிகளிலும் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.

கால்பந்தின் சூப்பர் ஸ்டார் இதுவரை பல கோல்களை அணிக்காக அடித்துள்ளார். அதில், சிறந்த 10 கோல்களை பற்றி இந்த செய்திக்குறிப்பில் காண்போம்.

1. 2008 - மான்செஸ்டர் யுனைடெட் vs போர்ட்ஸ்மவுத்

ரொனால்டோ தனது வாழ்க்கையில் அடித்த மிகச்சிறந்த ஃப்ரீ-கிக் கோல் இதுதான். போர்ச்சுகீசிய ஸ்ட்ரைக்கர் 25-யார்டிலிருந்து பந்தை நெட்டின் மேல் வலது மூலைக்கு செல்லுபடி தட்டிவிட்டார்.

2. 2009 - போர்டோ vs மான்செஸ்டர் யுனைடெட்

சாம்பியன்ஸ் லீக் காலிறுதி இறுதிப் போட்டியில் போர்டோவுக்கு எதிராக ரொனால்டோ தடுத்து நிறுத்த முடியாத முயற்சியை மேற்கொண்டார். எதிரணியின் நடுவில் இருந்து வலதுபுறமாக பந்தை நகர்த்தி சென்ற பின் நெட்டில் கோல் அடிக்க பந்தை பறக்கச் செய்தார். அது கோல் கீப்பரைக் கடந்து 1-0 என்ற வெற்றியை அணிக்கு பெற்று தந்தது.

3. 2010 - அல்மேரியா vs ரியல் மேட்ரிட்

இந்த போட்டியில் ரொனால்டோ, பெனால்டி பாக்சிலிருந்தும் அந்த பகுதிக்கு வெளியேயும் சமமாக ஆட்டத்தை வெளிக்காட்டினார். அந்த ஆட்டத்தில் தனது முதல் இரண்டு கோல்களை விஞ்சும் வகையில் அசாதாரணமான கோலை அடித்தார்.

4. 2011 - செவில்லா vs ரியல் மேட்ரிட்

கரிம் பென்செமாவின் பாஸிலிருந்து 30 யார்டு கடந்து பந்தை நகர்த்திய ரொனால்டோ, பக்க பாதுகாப்பு மூலம் சாதுர்யமாக நெட்டின் ஒரு வலதுபுற மூலையில் ஒரு ஷாட் அடித்தார். அந்த போட்டியில் ரியல் மாட்ரிட் 6-2 என்ற கணக்கில் செவில்லாவை வீழ்த்தியது. அன்றைய போட்டியில் அவர் அடித்த மூன்று கோல்களில் இதுதான் மிகச் சிறந்ததாகும்.

5. 2012 - பார்சிலோனா vs ரியல் மேட்ரிட்

எல்-கிளாசிகோவில் ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி என விளையாட்டின் இரண்டு ஜாம்பவான்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருந்தனர். எல்-கிளாசிகோவில் இரண்டு சாம்பியன்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கும்போது கண் சிமிட்டுவது கூட சாத்தியமில்லை. அந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் அபாரமானது.

6. 2013 - ஸ்வீடன் vs போர்ச்சுகல்

2014 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தகுதிவாய்ந்த பிளே-ஆஃப்களில் இடம்பெற போர்ச்சுகல் அணி ஸ்வீடன் அணியை வீழ்த்த வேண்டியிருந்தது. போட்டி முழுவதும் ரொனால்டோ தனது மேஜிக்கல் திறமையை வெளிக்காட்டினார். அவர் அந்த போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து எதிரணியை 3-2 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம், அவர் போர்ச்சுகலின் எல்லா நேரத்திலும் முன்னணி கோல் அடித்தவர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

7. 2014 - ரியல் மேட்ரிட் vs வலென்சியா

காயம் ஏற்பட்ட நேரத்தில் ரொனால்டோ கோல் அடித்த போட்டிதான் இது. ஆனால் ரியல் மாட்ரிட்டின் அணியை சேஸ் செய்வதற்கு இந்த கோல் போமானதாக இல்லை. இருப்பினும், ரொனால்டோ அடித்த கோல் மீண்டும் ஒரு புத்திசாலித்தனத்தை காட்டியது. ஏனெனில் அவர் ஒரு புள்ளியை ஒரு பேக்ஹீல் வாலியுடன் ஸ்கோர் செய்து அணியை காப்பாற்றினார்.

8. 2016- ரியல் மேட்ரிட் vs எஸ்பான்யோல்

எஸ்பான்யோலை 6-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வீழ்த்திய இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார். போட்டியில் அவர் தனி ரன்கள் மற்றும் கண்கவர் கோல்களுடன் அற்புதமான பினிஷிங் திறமையைக் காட்டினார்.

9. 2017 - ரியல் மேட்ரிட் vs பேயர்ன் முனிச்

2017 சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிப் போட்டியில், அவர் பேயர்ன் முனிச்சிற்கு எதிராக பரபரப்பாக இருந்தார். ஆட்டத்தில், ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார், 76வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆனால் போட்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றதால் ஐந்து நிமிடங்களுக்குள் இரண்டு முறை கோல் அடித்தார். அவரது அற்புதமான விளையாட்டு அவரது சாம்பியன்ஸ் லீக்கின் எண்ணிக்கையை 100 கோல்களுக்கு கொண்டு சென்று லாஸ் பிளாங்கோஸை அரையிறுதிக்கு எட்டுவதை உறுதிப்படுத்தியது.

10. 2018 - ஜுவென்டஸ் vs ரியல் மேட்ரிட்

இந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் மிகச்சிறந்த ஒன்றாகும். அவரது அபாரமான ஓவர்ஹெட் கிக் மூலம் அடித்த ஷாட் இன்னும் ரசிகர்களால் மறக்கமுடியாத கோலாக அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பெலே கோல் சாதனையை முறியடித்த ரொனால்டோ, வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான ஜோசப் பைகானின் கோல் சாதனையான 759 கோல்களையும் சமன் செய்தார். அதற்கடுத்ததாக நடைபெற்ற போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ இதுவரை 762 கோல்களை எடுத்து கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cristiano Ronaldo, Football

அடுத்த செய்தி