Home » News » Sports » CRISTIANO RONALDO FORGOT TO WEAR A FACE MASK IN THE STANDS SKD GHTA

மாஸ்க் அணியாமல் அமர்ந்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ: அறிவுறுத்திய போட்டி அமைப்பாளர் - வைரலாகும் வீடியோ

குரோஷிய அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியைப் கேலரியிலிருந்து மாஸ்க் அணியாமல் பார்த்துக்கொண்டிருந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

மாஸ்க் அணியாமல் அமர்ந்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ: அறிவுறுத்திய போட்டி அமைப்பாளர் - வைரலாகும் வீடியோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • Share this:
நாம் அனைவரும் 'புதிய இயல்புக்கு' பழக்கமாகிவிட்டோம். இதற்கிடையே உலகளாவிய கொரோனா  தொற்றுநோய் அதன் ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதிலிருந்து யாரும் விலக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாஸ்க் அணியாமல் விளையாட்டு அரங்கில் அமர்ந்திருந்த சம்பவம் விமர்சனங்களை பெற்று வருகிறது. ரொனால்டோ  2009ம் ஆண்டு முதல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


பின் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியின் பிரபல கிளப்பான ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆயிரம் போட்டிகளில் விளையாடிய சாதனை மற்றும் ஒரே ஆண்டில் 11 கோல்கள் அடித்து கேப்ரியல் ஓமர் பாடிஸ்டுடா மற்றும் ஃபேபியோ குவாக்லியாரெல்லா ஆகியோருடன் தனது சாதனை பகிர்ந்து கொண்டார்.



கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குரோஷிய அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ரொனால்டோ விளையாட இருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரொனால்டோ பங்கேற்கவில்லை.

ஆனால் இந்தப் போட்டியில் தன்னுடைய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்தில் உள்ள கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்து, அணியினரை உற்சாகப்படுத்தி வந்தார். இந்தப் போட்டியில் போர்ச்சுகல் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வீழ்த்தியது.

குரோஷிய அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது காலரியில் சமூக இடைவெளியை பின்பற்றி உட்கார்ந்து போட்டியை ரசித்த ரொனால்டோ, மாஸ்க் அணியவில்லை. இதனை பார்த்த போட்டி அமைப்பாளரான பெண் ஒருவர் ரொனால்டோவின் அருகில் சென்று மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து ரொனால்டோ மாஸ்க் அணிந்து போட்டியை தொடர்ந்து பார்த்தார். போட்டி முடியும் வரை அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் தண்டனையில் இருந்து தப்பித்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதற்கு பலர் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். கண்ணுக்கு தெரியாத வைரஸ் ரொனால்டோவிற்கு மட்டும் விதிவிலக்காக இருக்காது. பிரபலமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்க கூடாது என கூறி வருகின்றனர். அதேசமயம் அவருக்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading