Home /News /sports /

சிறை வேண்டாம்... ரூ.153 கோடி தருகிறேன்: ரொனால்டோ சம்மதம்!

சிறை வேண்டாம்... ரூ.153 கோடி தருகிறேன்: ரொனால்டோ சம்மதம்!

களத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Image: Reuters)

களத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Image: Reuters)

#CristianoRonaldo accepts fine of 19 million euros | வருமான வரி ஏய்ப்பு வழக்கில் ரொனால்டோவுக்கு 23 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    வருமான வரி ஏய்ப்பு வழக்கில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 153 கோடி அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டார்.

    கால்பந்து உலகின் ஹீரோவாக வலம் வருபவர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 2016-ம் ஆண்டு அணியை திறம்பட வழிநடத்தி யூரோ கோப்பையை வென்று கொடுத்தார். தற்போது யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    Cristiano Ronaldo, கிறிஸ்டியானோ ரொனால்டோ
    வருமான வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய ரொனால்டோ. (AP)


    ரொனால்டோவுக்கு விளம்பரங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. 2009 முதல் 2018 வரை ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக பங்கேற்றார். இந்த காலகட்டத்தில் வருமான வரி முறையாக செலுத்தவில்லை என ரொனால்டோ மீது ஸ்பெயின் அரசு வழக்கு தொடர்ந்தது.

    மாட்ரிட் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் ரொனால்டோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 23 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சிறை செல்ல விரும்பாத அவர், வருமான வரித்துறையுடன் சமரசம் செய்துகொள்வதாக தெரிவித்திருந்தார்.

    Cristiano Ronaldo, கிறிஸ்டியானோ ரொனால்டோ
    அபராதம் கட்ட ஒப்புக்கொண்ட ரொனால்டோ. (FIFA)


    இதனை அடுத்து, இன்று நீதிமன்றத்தில் ரொனால்டோ ஆஜரானார். இந்த வழக்கில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், ரொனால்டோ ரூ. 153 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகையை செலுத்த ரொனால்டோ ஒப்புக்கொண்டதால், சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார்.

    இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Cristiano Ronaldo

    அடுத்த செய்தி