ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விபத்தில் படுகாயமடைந்த வீரர் ரிஷப் பந்த் எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை கொடுத்த அப்டேட்

விபத்தில் படுகாயமடைந்த வீரர் ரிஷப் பந்த் எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை கொடுத்த அப்டேட்

விபத்தில் படுகாயமடைந்த ரிஷாப் பந்த்

விபத்தில் படுகாயமடைந்த ரிஷாப் பந்த்

இதனிடைய, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கெர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரிஷாப் பந்த்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் குணமடைய 3 மாதங்கள் ஆகும் என மேக்ஸ் மருத்துவமனை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு காரில் சென்றபோது, முகம்மதுபூர் ஜாட் பகுதியில் விபத்து ஏற்பட்டது. அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதிய கார், தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரின் ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பந்த், நூலிழையில் உயிர் தப்பினார்.

இதனையடுத்து அவர் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்-க்கு நெற்றியில் இரு இடங்களில் வெட்டுக்காயம், வலது கால் மூட்டு, வலது கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனிடைய, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கெர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரிஷப் பண்ட்-ஐ சந்தித்தனர். மேலும், ரோகித் சர்மா உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் ரிஷப் பந்தி-ன் கண் புருவத்திற்கு மேல் ஏற்பட்ட காயத்துக்காக சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள காயங்களுக்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், ரிஷப் பந்த் ஓரளவு குணமடைவதற்கு 3 மாதங்கள் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளது.

First published:

Tags: AIIMS, Rishabh pant