Home /News /sports /

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

நடராஜன்

நடராஜன்

நடராஜன், அணியில் இடம்பெற்றதோடு மட்டும் நின்றுவிடாமல் அறிமுக தொடரிலேயே இந்திய அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக விளையாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஐ.பி.எல் 2020 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும் ஒருவர். இதன் விளைவாக இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற நடராஜன் அணியின் முன்னனி வீரர்களின் காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அணியில் இடம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்பதால் நடராஜன் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது எனலாம்.

    நடராஜன், அணியில் இடம்பெற்றதோடு மட்டும் நின்றுவிடாமல் அறிமுக தொடரிலேயே இந்திய அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக விளையாடினார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணி இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு திரும்பியது.

    இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு அவரது சொந்த ஊர் மக்கள் மேள தாளக்களுடன் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் இன்று நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பழனி கோவிலுக்கு வருகை தந்த நடராஜன் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

    முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு நடராஜன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரது குழந்தைப் பிறந்தது. இருப்பினும், ஒருநாள், டி-20, டெஸ்ட் ஆகிய தொடர்களை முடித்துவிட்டே இந்தியா திரும்பினார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ram Sankar
    First published:

    Tags: T natarajan

    அடுத்த செய்தி