• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • காயத்தால் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் விலகல்!

காயத்தால் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் விலகல்!

வருண் சக்ரவர்த்தி. (TNPL)

வருண் சக்ரவர்த்தி. (TNPL)

#IPL2019: #KXIP spinner #VarunChakravarthy sidelined by a finger injury | வருண் சக்கரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக சில ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாடி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால், அதை விட 42 மடங்கு அதிகமாக ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

    அதன்பிறகு, சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து வருண் விலகினார்.

    வருண் காயம் குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி சதிஸ் மேனன் கூறுகையில், “வருணுக்கு காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டம். ஆனால் இந்த போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். அவருடைய திறமைகளின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறோம்” என கூறினார்.

    இதன்மூலம், மொஹாலியில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி பங்கேற்கமாட்டர் என்பது உறுதியாகிவிட்டது.

    பெங்களூருவின் பவுலிங் படுமோசம்... கலாய்த்த ஹர்திக் பாண்டியா!

    சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!

    தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

    அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

    பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: