தோனி, சச்சினை பின்னுக்குத்தள்ளி சாதனை படைப்பாரா ரோகித்?

Ind vs Aus: #RohitSharma targets #SouravGanguly’s record in fifth ODI | ரோகித் சர்மா 199 இன்னிங்சில் விளையாடியுள்ள 7954 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனி, சச்சினை பின்னுக்குத்தள்ளி சாதனை படைப்பாரா ரோகித்?
பந்தை சிக்சருக்கு விளாசிய ரோகித் சர்மா. (ICC)
  • News18
  • Last Updated: March 13, 2019, 2:00 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா, தோனி மற்றும் சச்சின் உள்ளிடோரை பின்னுத்தள்ளி சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ராஞ்சி மற்றும் மொஹாலியில் நடந்த 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்க 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 8000 ரன்களைக் கடந்த தோனி, சச்சின் உள்ளிட்டோரின் சாதனை பட்டியலில் இணைய இருக்கிறார்.

Rohit Sharma, ரோகித் சர்மா
ஹிட்மேன் ரோகித் சர்மா. (BCCI)


ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் அரங்கில் 8,000 ரன்கள் எடுத்தவர் என்ற மைல்கல்லை எட்டுவார். இந்த மைல்கல்லை எட்டப்போகும் 9-வது இந்திய வீரர் ரோகித். இதன்மூலம், சச்சின் (210 இன்னிங்ஸ்), தோனி (214 இன்னிங்ஸ்), டிராவிட் (228 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனையை தகர்ப்பார்.

இதுவரை 199 இன்னிங்சில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 7954 ரன்கள் எடுத்துள்ளார். 200-வது இன்னிங்சில் 8000 ரன்கள் எடுத்தால், சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.

Also Watch...

First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading