முகப்பு /செய்தி /விளையாட்டு / புதுபோன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி போட்ட பதிவு.. கூலாக கலாய்த்த சொமேட்டோ..!

புதுபோன் தொலைந்த கடுப்பில் விராட் கோலி போட்ட பதிவு.. கூலாக கலாய்த்த சொமேட்டோ..!

விராட் கோலி

விராட் கோலி

புது செல்போனை தொலைத்துவிட்டதாக விராட் கோலி போட்ட பதிவுக்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதில் டிரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்திய அணியின் டாப் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் விளையாட்டு அல்லாது வேறு ஒரு விஷயம் தொடர்பாக டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுத்த கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இமயமலை பகுதிகளில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாக ட்ரெண்டானது.  அதில், “இருப்பதிலேயே மிக சோகமான விஷயம் என்றவென்றால், வாங்கிய புது போனை பெட்டி திறந்து பிரித்து கூட பார்க்காமல் பறிகொடுப்பது தான். யாராவது அதை பார்த்தீர்களா?” என்று பதிவில் கூறியிருந்தார்.

இதன் மூலம் விராட் கோலி ஒரு புது செல்போனை வாங்கி அதனை டப்பாவை விட்டு திறந்து பார்ப்பதற்கு முன் தொலைத்துவிட்டார் என்பது தெரியவந்தது. வாங்கிய செல்போன் தொலைந்து சோகத்தில் இருக்கும் விராட் கோலியை ஆறுதல் படுத்த ரசிகர்கள் இணையம் மூலமாக ஒரு புறம் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இது தொடர்பாக ஜோமேட்டோ நிறுவனம் அளித்த ரிப்ளை ஒன்று டிரெண்டாகி வருகிறது.

விராட் கோலி பதிவுக்கு பதில் ட்வீட் அளித்த சொமேட்டோ  நிறுவனம், கவலை வேண்டாம் கோலி, ஐஸ் க்ரீம் ஒன்றை ஆர்டர் செய்து அண்ணி அனுஷ்காவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள் எல்லாம் கூலாகிவிடும் என்று பதிவிட்டு இருந்தது. கடுப்பில் இருக்கும் விராட் கோலியை மேலும் பங்கம் செய்யும் விதமாக ஜோமேட்டோ அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Mobile phone, Virat Kohli, Zomato