கொஞ்சும் தமிழில் தோனி, ஸிவா உரையாடல் - ‘வாவ்’ வைரல் வீடியோ

சமீபத்தில் தோனி இல்லாமல் சென்னையில் நடந்த டி20 போட்டியில் மைதானமே களையிழந்து காணப்பட்டது.

Web Desk | news18
Updated: November 25, 2018, 11:45 AM IST
கொஞ்சும் தமிழில் தோனி, ஸிவா உரையாடல் - ‘வாவ்’ வைரல் வீடியோ
தோனி தனது மகள் ஸிவா உடன்
Web Desk | news18
Updated: November 25, 2018, 11:45 AM IST
கிரிக்கெட் வீரர் தோனி தனது மகள் ஸிவா உடன் தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் தோனி, குடும்பத்துடன் தற்போது நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது மகளின் செல்ல சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டு லைக்ஸ் குவித்து வருகிறார். தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை அவர் வெளியிட்டிருப்பதுதான் தற்போதைய இன்ஸ்டா ஹிட்.!

‘எப்படி இருக்கீங்க’ என கொஞ்சும் தமிழில் ஸிவா கேட்க, ‘நல்லா இருக்கேன்’ என டோனி பதில் கூறுகிறார். இதனை தொடர்ந்து போஜ்புரி மொழியிலும் ஸிவா அதே கேள்வியை கேட்க, தோனி பதிலளிக்கிறார்.


சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என்று கூறியிருந்த தோனியை, தமிழ் ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைத்து வருகின்றனர். முழுவதும் பேசாவிட்டாலும் அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் அவர் தமிழில் பேசி வருகிறார்.Loading...

 
View this post on Instagram
 

Greetings in two language


A post shared by M S Dhoni (@mahi7781) on

சமீபத்தில் சென்னையில் நடந்த டி20 போட்டியிலும் அவர் விளையாடதால் மைதானம் களையிழந்து காணப்பட்டது. இனி, அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னையில் அவர் விளையாடுவார் என்பதால் சோர்வில் இருந்த தோனியின் தமிழ் ரசிகர்களுக்கு இந்த வீடியோ பூஸ்ட் கொடுப்பது போல அமைந்துள்ளது.

Also See..

First published: November 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...