ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 0-2 என்று தோல்வி அடைந்து தொடரை இழந்தது. 2-0 என்று முன்னிலை வகித்து தொடரை சீல் செய்த ஜிம்பாப்வே மீண்டும் 290 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டி தொடரைக் கைப்பற்றியது.
ஜிம்பாப்வே 15 ஓவர்களில் 49/4 என்று தோல்வியின் பிடியில் இருந்தது அப்போது ஜோடி சேர்ந்த சிகந்தர் ரசா 127 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 117 ரன்களையும் ரெஜிஸ் சகப்வா 75 பந்துகலில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 102 ரன்களையும் விளாச, இருவரும் சேர்ந்து 201 ரன்களை 5வது விக்கெட்டுக்காக 28 ஓவர்களில் விளாச 47.3 ஓவர்களில் ஜிம்பாப்வே 291/5 என்று அபார வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியிலும் இப்படித்தான் விக்கெட்டுகள் முதலில் சரிய சிகந்தர் ரசா, இன்னன்சண்ட் கேய்யா என்ற வீரர் அதிரடி சதம் எடுக்க 305 ரன்கள் இலக்கை விரட்டி வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்தது ஜிம்பாப்வே. சிகந்தர் ரசா 2வது போட்டியில் நேற்று 117 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இன்னொரு முனையில் டோனி முன்யோங்கா 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் இன்னிங்சை ஆவேசமாக பினிஷ் செய்து வெற்றி பெறச் செய்தார்.
வங்கதேச அணியில் ஷோரிபுல் இஸ்லாம் 9 ஓவர்களில் 77 ரன்களை வாரி வழங்கி விக்கெட் எதையும் கைப்பற்றாமல் முடிந்தார். ரெஜிஸ் சகப்வா 73 பந்துகளில் சதம் அடித்தது ஜிம்பாபவே வீரர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதமாகும். இவரும் சிகந்தர் ரசாவும் 201 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது ஜிம்பாப்வேயின் 3வது ஒருநாள் இரட்டைச் சதக் கூட்டணியாகும்.
முன்னதாக வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 பந்தில் 50 அடித்து வெளியேறினார். மஹ்முதுல்லா 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 84 பந்துகளி 80 ரன்கள் விளாச ஆபிப் ஹுசைன் 41 பந்தில் 41 ரன்களையும் ஹுசைன் ஷாண்ட்டோ 38 ரன்களையும் எடுத்தனர். மிடில் ஓவர்களில் ஜிம்பாப்வே கட்டிப்போட்டதால் வங்கதேசத்தினால் 300 ரன்களை எட்ட முடியவில்லை.
சிகந்தர் ரசா பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்ரார். 5 ஆண்டுகளில் டெஸ்ட் ஆடும் நாட்டுக்கு எதிராக ஜிம்பாப்வே பெறும் தொடர் வெற்றி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Cricket, ODI, Zimbabwe