முகப்பு /செய்தி /விளையாட்டு / ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பா, இல்லை தனக்கு முக்கியத்துவமா?- ராகுல் என்ன செய்யப் போகிறார்?

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பா, இல்லை தனக்கு முக்கியத்துவமா?- ராகுல் என்ன செய்யப் போகிறார்?

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்

இந்திய அணியில் தவான், ராகுல், ஷுப்மன் கில், இஷான் கிஷன் என்று 4 ஓப்பனர்கள் உள்ளனர், யாரை அணியில் எடுப்பார்கள் என்று தெரியவில்லை, இப்போதைக்கு ஷுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸில் அபாரமாக ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார், எனவே அவரை உட்கார வைப்பது கடினமான ஒரு முடிவு என்பதோடு மணீஷ் பாண்டேயை கோலி அழித்தாற்போல் ஷுப்மன் கில்லையும் இழப்பதில்தான் போய் முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இந்திய அணியில் தவான், ராகுல், ஷுப்மன் கில், இஷான் கிஷன் என்று 4 ஓப்பனர்கள் உள்ளனர், யாரை அணியில் எடுப்பார்கள் என்று தெரியவில்லை, இப்போதைக்கு ஷுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸில் அபாரமாக ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார், எனவே அவரை உட்கார வைப்பது கடினமான ஒரு முடிவு என்பதோடு மணீஷ் பாண்டேயை கோலி அழித்தாற்போல் ஷுப்மன் கில்லையும் இழப்பதில்தான் போய் முடியும்.

ஷுப்மன் கில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில், 3 ஆட்டத்தில் 2 அரைசதம் உள்பட மொத்தம் (64, 43, 98) 205 ரன்கள் எடுத்து தொடர்நாயகனாக மிளிர்ந்தார். மேலும், தவானுடன் ஜோடி சேர்ந்து அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்ததோடு, வலுவான பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தார்.

ஆனால் ஜிம்பாப்வே தொடரில் தேவையில்லாமல் ஷிகர் தவானிடமிருந்து கேப்டன்சியைப் பிடுங்கி ராகுலிடம் கொடுத்ததால் ராகுலை உட்கார வைக்க முடியாது, மேலும் இந்திய அணி நிர்வாகம் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை டி20 போட்டிகளுக்காக ராகுலை பார்முக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனால் ஷுப்மன் கில், தன் தொடக்க இடத்தை விட்டுக் கொடுத்து 3ம் நிலையில்தான் களமிறங்க வேண்டி வரும். இது தொடர்பாக இந்திய முன்னாள் டெஸ்ட் ஓப்பனர் தேவங் காந்தி கூறும் போது, “கரீபியன் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டாலும், பல நிலைகளுக்கு வீரர்களைத் தயார்படுத்துவதே இந்த அணியின் கொள்கையில் இருந்து என்னால் அறிய முடிகிறது. எனவே நான் என்ன உணர்கிறேன் என்றால் ஜிம்பாப்வே தொடரில், அவர் நம்பர். 3-ல் வர வேண்டியிருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.

சிறப்பாக ஆடிவிட்டு மீண்டும் டவுன் ஆர்டரில் 3ம் நிலையில் இறங்குவது ஷுப்மன் கில்லுக்கும் சிக்கல்தான், ஆனால் வேறு வழியில்லை. ஆனால் தற்போது, ​​ஆசிய கோப்பை டி20யின் தொடக்க ஆட்டத்திற்கு ராகுலை தயார்படுத்துவதே அணி நிர்வாகத்தின் நோக்கமாக இருக்கும். அவருக்கு நிறைய பேட்டிங் நேரம் தேவை, அதுதான் தற்போதைய முன்னுரிமையாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், என்கிறார் தேவங் காந்தி.

இதனால் கே.எல்.ராகுல் இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்தபடியான பெரியோர்களின் ஆசீர்வாதத்தினால் ‘சிறந்த லாபி’ அமையப்பெற்றுள்ளதால் அவருக்காக பார்மில் உள்ள ஷுப்மன் கில் விட்டுக்கொடுத்துத்தான் ஆகவேண்டிய நிலை.

top videos

    எப்படி கோலி வந்து விட்டார் என்றால் ஷ்ரேயஸ் அய்யரோ, ஹூடாவோ, இஷான் கிஷனோ வழி விட வேண்டி வருகிறது அதே போல்தான், வர்த்தக ரீதியாக ஹை வோல்டேஜ் வீரர்கள் லெவனுக்குத் திரும்புவதற்கேற்ப ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் செய்யும் பரிசோதனை முயற்சிகளெல்லாம் ஏதோ அணியை வளர்த்தெடுப்பதற்காக என்பது போல் பில்ட் அப் ஏற்கெனவே தொடங்கி விட்டது.

    First published:

    Tags: Kl rahul, Shubman Gill