ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்ட் திறமைசாலி பிரெண்டன் டெய்லர் பிரியாவிடை

பிரியாவிடை பெற்ற பிரெண்டன் டெய்லர்.

ஜிம்பாப்வேயின் ஆகச்சிறந்த ஒருநாள் வீரர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார்.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  2004-ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 202 போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த 2வது ஜிம்பாப்வே பேட்ஸ்மென் ஆனார்.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் 2,320 ரன்களை 36.25 என்ற சராசரியில் எடுத்த டெய்லர், 6 சதங்கள் 12 அரைசதங்க்ளை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 171. இதில் 254 பவுண்டரிகள் 22 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் 204 போட்டிகளில் 6677 ரன்களை 35.70 என்ற சராசரியில் 76.66 என்ற 1ரேட்டில் எடுத்துள்ளார், ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் 39 அரைசதங்களை பிரெண்டன் டெய்லர் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 145 ஆகும். இவருக்கு வயது 35 முடிந்துள்ளது.

  45 டி20 சர்வதேச போட்டிகளில் 934 ரன்களை எடுத்த டெய்லரின் ஹை ஸ்கோர் 75 நாட் அவுட் ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 118.22. இதில் 6 அரைசதங்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 106 சிக்சர்கள், 598 பவுண்டரிகள் விளாசியுள்ளார். விக்கெட் கீப்பராக 133 கேட்ச்கள் 20 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். டி20 கிரிகெட்டில் 93 பவுண்டரிகள் 24 சிக்சர்கள், 20 கேட்ச்கள் 2 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார்.

  ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் ஆண்டி பிளவர் அதிகபட்சமாக 213 போட்டிகளில் 6,786 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்க பிரெண்டன் டெய்லர் 2ம் இடம் பிடித்துள்ளார். தன் ஓய்வு குறித்து பிரெண்டன் டெய்லர் கூறும்போது, “என் தாய்நாட்டுக்காக நான் ஆடும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது, இத்துடன் ஓய்வு பெறுகிறேன், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். 17 ஆண்டுகள் உச்சமும் தாழ்வும் உள்ள கரியர், உலகிற்காக நான் இதை மாற்ற முடியாது.

  Also Read: Virat Kohli| கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுகிறார்? : ரோகித் சர்மாவை நியமிக்க முடிவு?

  கிரிக்கெட் எனக்கு எளிமையைக் கற்றுக் கொடுத்தது. அணியை நல்ல நிலையில் இருத்த வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்துள்ளது. 2004-ல் வரும்போது அந்த எண்ணத்தில்தான் வந்தேன் இப்போது அதை நிறைவேற்றியதாகவே கருதுகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 2015-ல் ஜிம்பாப்வே கிரிக்கெட்டைத் துறந்து கோல்பாக் டீலில் நாட்டிங்கம் ஷயருக்கு ஆடச்சென்றார். பிறகு 2017-ல் ஜிம்பாப்வே அணிக்குத் திரும்பினார். 2011-2014-ல் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Brendan Taylor (@bt_cricket)


  ஜிம்பாப்வே அணிக்கு இவரது ஓய்வு பெரிய இழப்புதான், ஏனெனில் இவருக்கு வயது 35 தான் ஆகிறது, இன்னும் 2 ஆண்டுகள் அவர் ஆடியிருக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: